திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு - மிஸ் பண்ணாதீங்க

tirupatidevasthanam திருப்பதி
By Petchi Avudaiappan Feb 05, 2022 07:11 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கான இலவச தரிசன டிக்கெட் விநியோகம் குறித்தும், சுப்ரபாத சேவைக்கு பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால் கொரோனா காரணமாக சிறப்பு தரிசனம், இலவச தரிசனம் உள்ளிட்ட அனைத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

கட்டண தரிசனம், இலவச தரிசனம் ஆகியற்றுக்கான டிக்கெட்டுகள் கடந்த பல மாதங்களாக ஆன்லைனில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே பிப்ரவரி மாதத்துக்கான 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட்டுகள் கடந்த மாதம் விற்பனையான நிலையில்  28 நாட்களுக்கு 3.36 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 

இதேபோல் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை மொத்தம் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. பிப்ரவரி 15 ஆம் தேதி வரை மட்டுமே இந்த டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டதால் 16 ஆம் தேதி முதல், பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் இல்லாமவ், வழக்கம்போல் நேரடியாக வழங்கப்படலாம் என கூறப்பட்டது. 

பிப்ரவரி 15 ஆம் தேதி காலை 9 மணி அளவில், இலவச தரிசன டிக்கெட் பக்தர்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடைபெற்று வரும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் மார்ச் 1 ஆம் தேதி முதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.