திருப்பதி செல்பவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - இனி லட்டுக்கு கோவிந்தா..கோவிந்தா...

By Petchi Avudaiappan Apr 21, 2022 09:02 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு லட்டுகளை விநியோகிப்பதில் கடும் கட்டுப்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் விதித்துள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நம் அனைவருக்கும் திருப்பதி என்றவுடன் உடனே நினைவுக்கு வருவது அங்கு பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தான். 

பொதுவாக  ஏழுமலையானை வழிபட்டு வரும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலசமாக வழங்கப்பட்டு வந்தது. மேலும் கூடுதல் லட்டு தேவைப்படுவோர் அதற்கான கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என விதி இருந்தது. இந்நிலையில் ஏழுமலையான் பக்தர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

அதாவது திருப்பதியில் லட்டுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்களுக்கு இனி  ஒரு குடும்பத்துக்கு இரண்டு என்ற வீதத்தில் மட்டுமே லட்டு வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

 கடந்த வாரம் திருப்பதி தேவஸ்தானம் சார்பி்ல் சென்னையில் நடைபெற்ற திருக்கல்யாணத்தையொட்டி பக்தர்களுக்கு வழங்குவதற்காக லட்சணக்கமான லட்டுகள் சென்னைக்கு அனுப்பப்பட்டன. இதன் காரணமாக லட்டுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை சமாளிக்கவே இத்தகைய புதிய கட்டுப்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம்  நடைமுறைப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.