படித்தும் வேலை கிடைக்காததால் விரக்தி - மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

By Swetha Subash May 14, 2022 02:45 PM GMT
Report

படித்தும் வேலை கிடைக்காத விரக்தியால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை எற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட திம்மனாமத்தூர் ஊராட்சி குறுகப்பள்ளி பகுதியில் வசிப்பவர் முருகம்மாள் என்கிற வரலட்சுமியின் மகன் பாரி வள்ளல் (23).

படித்தும் வேலை கிடைக்காததால் விரக்தி - மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை! | Tirupathur Youth Commits Suicide Of Unemployment

டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு ஆங்காங்கே சிறு வேலைகளை செய்து வந்த இவருக்கு நிரந்தரமாக ஓர் அரசு வேலை கிடைக்கவில்லை என்கிற ஏக்கம் நீண்ட நாட்களாக இருந்துள்ளது.

இதனை தன்னுடைய நண்பர்களிடமும் மற்றும் தாயிடமும் அவ்வப்போது கூறி புலம்பியதாக தெரிகிறது. இந்நிலையில் சமீப மாதங்களாக நோய்த்தொற்று காலத்தில் வேலையில்லாமல் வெறுமனே வீட்டில் இருந்த பாரிவள்ளல் திடீரென மனம் உடைந்து இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

படித்தும் வேலை கிடைக்காததால் விரக்தி - மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை! | Tirupathur Youth Commits Suicide Of Unemployment

சம்பவத்தை கண்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் திருப்பத்தூர் கிராமிய காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராமிய காவல்துறை பாரி வள்ளலின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்பு தற்கொலை சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.