எழில் கொஞ்சும் ஏலகிரியை கொண்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தின் வரலாறு தெரியுமா?

Tamil nadu India
By Karthick Sep 03, 2023 08:16 AM GMT
Report

தோல் தொழிற்சாலைகளை அதிகளவில் கொண்ட திருப்பத்தூர் மாவட்டம் அறிவோம்

திருப்பத்தூர் மாவட்டம்  

 திருப்பத்தூர் மாவட்டம் வேலூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று உருவாக்கப்பட்டது. புதியதாக உருவாக்கப்பட்ட இம்மாவட்டத்தின் தலைநகராக திருப்பத்தூர் உள்ளது.

tirupathur-history-in-tamil

தெற்கு மற்றும் கிழக்கே திருவண்ணாமலை மாவட்டமும், மேற்கே கிருஷ்ணகிரி மாவட்டமும், கிழக்கே வேலூர் மாவட்டம் மற்றும் வடக்கே ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களுக்கு இடையில் திருப்பத்தூர் மாவட்டம் சுமார் 1831.99 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும்.

tirupathur-history-in-tamil

இம்மாவட்டம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி என 4 சட்டமன்றத் தொகுதிகளையும், மாவட்டத்தின் பல பகுதிகள் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதியிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2019-இல் உதயமான திருப்பத்தூர் மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 12,79,953 ஆகும்.

வரலாறு 

ஆங்கிலேயர்களால் வட ஆற்காடு மாவட்டத்தின் ஒருபகுதியாகவே 19-ஆம் நூற்றாண்டில் திருப்பத்தூர் இருந்துள்ளது. பின்னர் 1996 இல் வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம், வேலூர் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.பின்னர் 2019-இல் வேலூர் மாவட்டத்தை பிரித்து திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. 

தொழில்கள்

கனிமவளமிக்க திருப்பத்தூர் மாவட்டத்தில் செம்மண், செங்கல் களிமண் போன்ற கனிமங்கள் அதிகளவில் கிடைக்கின்றன. இம்மாவட்டத்தில் இருந்தே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு செம்மண் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே போல செங்கல் களிமண் இருக்கும் காரணத்தால் இம்மாவட்டத்தை சுற்றி பல இடங்களில் செங்கற்சூலைகள் உள்ளன.  

tirupathur-history-in-tamil

தென்னிந்தியாவின் முக்கிய தொழில் மையமாக விளங்கும் திருப்பத்தூர் தோல் மற்றும் தோல் பொருட்கள் காலணிகள், ஆடைகள் போன்றவற்றையும் நாடுமுழுவதும் அதிகளவில் ஏற்றுமதி செய்து வருகின்றது. இம்மாவட்டத்தில் கணிசமான மக்கள் இந்த தொழிலிலேயே ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நடுத்தர தோல் தொழிற்சாலைகள் முதல் பல பெரிய தோல் தொழிற்சாலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏலகிரி 

திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடி-திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ள ஏலகிரி தென்னிந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலமாக திகழ்ந்து வருகின்றது. கடல் மட்டத்தில் இருந்து இம்மலை சுமார் 1,700,20 மீட்டர் உயரத்தில் அமையப்பெற்றுள்ளது. 30 சதுர கிலோமீட்டர் மொத்த பரப்பளவு கொண்ட ஏலகிரி நான்கு மலைகளால் சூழப்பட்டு காணப்படுகின்றது.

tirupathur-history-in-tamil

ஏலகிரி மலையில் 14 சிறு சிறு கிராமங்கள் அமைந்துள்ளன. அதே போல பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரம் திருக்கோவிலும் இந்த மலையில் தான் அமைய பெற்றுள்ளது. இங்கு Para Gliding, மலையேற்றம் போன்றவை சுற்றுலாவாசிகளை மிகவும் கவருகின்ற விஷயமாக திகழ்கிறது.   


பொதுவாக இம்மலைப்பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 31 செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 11 செல்சியசாகவும் இருப்பதும் ஏலகிரி மக்களை கவர்ந்திழுக்கும் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏலகிரியில் அரசு மூலிகைப்பண்ணை, இயற்கைப்பூங்கா, நிலாவூர் ஏரி மற்றும் பூங்கா போன்றவரை முக்கிய சுற்றுலாவிடமாக உள்ளது.

ஜலகம்பாறை அருவி

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையினில் சடையனூர் என்னும் இடத்தில் ஜலகம்பாறை அருவி அமைந்துள்ளது. ஏலகிரி மலையின் மறுபுறத்தில் மலையின் கீழ்ப்பகுதில் இந்த ஜலகம்பாறை அருவி அமைந்துள்ளது. ஏலகிரி மலையில் உருவாகும் ஆறு, சடையனூரில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாகக் கொட்டும் நிலையில் இந்த ஜலகம்பாறை அருவி உருவாகியிருக்கிறது.

tirupathur-history-in-tamil

ஏலகிரி மலையில் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்கள் இருக்கும் காரணத்தால், இந்த அருவியில் வந்து நீராடினால் அது பலவகையான நோய்களை நீக்கும் என்ற நம்பிக்கை தற்போதும் மக்களிடையே நிலவி வருகின்றது. இந்த அருவி திருப்பத்தூரிலிருந்து பிச்சனூர் செல்லும் வழியில் 13 கிலோமீட்டர் தொலைவில் சடையனூரில் அமைந்துள்ளது.