திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!

Tamil nadu Tirupathur
By Vidhya Senthil Feb 03, 2025 12:47 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in கட்டுரை
Report

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும்.கடந்த 2019 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 35 ஆவது மாவட்டமாக, இம்மாவட்டத்தை 28 நவம்பர் 2019 அன்று தமிழக முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

tirupathur collector name details in tamil

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய இரு கோட்டங்களையும், திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, மற்றும் ஆம்பூர் ஆகிய நான்கு வட்டங்களையும், 195 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது.208 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.

இம்மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய நான்கு நகராட்சிகளும், ஆலங்காயம், நாட்றாம்பள்ளி, உதயேந்திரம் ஆகிய மூன்று பேரூராட்சிகளும் உள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் தென்னிந்தியாவின் ஒரு தொழில்துறை மையமாகும்.

tirupathur collector name details in tamil

தோல் மற்றும் தோல் பொருட்கள் காலணிகள், ஆடைகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்யப்படுகிறது பல பெரிய மற்றும் நடுத்தர தோல் தொழில்கள் உள்ளன. 

முதல் மாவட்ட ஆட்சியர் 

திருப்பத்தூ மாவட்டத்தின் முதல் ஆட்சியராக திரு. ம.ப.சிவன் அருள் ஐஏஎஸ் அவர்கள் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இவர் 28-11-2019 முதல்15-06-2021 வரை பணியில் இருந்தார். எம்.பி சிவனருள் ஒரு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

tirupathur collector name details in tamil

பிப்ரவரி 16, 2024 அன்று தமிழக அரசு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC)உறுப்பினராக நியமிக்கப்பட்டார் எம்.பி சிவனருள் தருமபுரியில் சப் கலெக்டராக பதவி வகித்தார்.திருப்பத்தூர் மாவட்டத்தை உருவாக்குவதற்கான சிறப்பு அலுவலராகவும் நியமிக்கப்பட்டார்.

அதன்பிறகுமாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஐஏஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் அமர் குஷ்வாஹா மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

அமர் குஷ்வாஹா IAS

அமர் குஷ்வாஹா உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த 2012-ம் ஆண்டு ஐஏஎஸ் பணிக்கு தேர்வானார். 2013-14 வரை திருவள்ளூரில் உதவி பயிற்சி ஆட்சியராக பணியாற்றினார். 2014-17 வரை சிவகாசி உதவி ஆட்சியராகவும், 2017-19 காலகட்டத்தில் ஊட்டியில் திட்ட இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

tirupathur collector name details in tamil

2019-21 வரை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் இயக்குநராக பணியாற்றி உள்ளார்.இவர் 15-06-2021 முதல்07-02-2023 வரை பணியில் இருந்தார். பின்னர் சமூக பாதுகாப்பு துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 

பாஸ்கர பாண்டியன் IAS

இதனையடுத்து திருப்பத்தூ மாவட்டத்தின் 3 வது ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டார். இவர் 2011-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் இணை இயக்குநராகவும் அதன் பிறகு சென்னை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளராகவும் பணியாற்றினார்.

tirupathur collector name details in tamil

2012-ம் ஆண்டு தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நலக் கழகத்தின் பொதுமேலாளராகவும், 2013-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தின் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி 2014-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை முதல்வரின் தனிப்பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த பாஸ்கர பாண்டியன் அதன் பிறகு செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநராக பணியாற்றி வந்தார். 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் மாநில திட்டக்குழு செயல் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.  

இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தின் மூன்றாவது மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியனை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

  தர்ப்பகராஜ் பாண்டியன் IAS

அதன் பிறகு திருப்பத்தூர் மாவட்ட 4வது ஆட்சியராக தர்ப்பகராஜ் பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக தர்ப்பகராஜ் நியமிக்கப்பட்டார். பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

tirupathur collector name details in tamil

பெரம்பலுார் மாவட்டம், அரும்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ்- ராஜம் தம்பதிகளின் மகன் தர்ப்பகராஜ் (47) எம்.ஏ., பி.எல்., பட்டதாரியான இவர், 2005ம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று, துணை ஆட்சியராக அரசு பணியில் சேர்ந்தார்.

பயிற்சி முடிந்து முதலில் நீலகிரி மாவட்டம், குன்னுாரில் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றினார். பின்னர், கோயம்புத்துார் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றினார். இதன்பின், மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்வு பெற்று,

மதுரை மாநகராட்சி துணை ஆணையர், சென்னை பெருநகர மாநகராட்சி உதவி ஆணையர், திருச்சிராப்பள்ளி மாவட்ட வருவாய் அலுவலர், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய பொது மேலாளர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன சட்ட அலுவலர் போன்ற பணியிடங்களில் பணிபுரிந்துள்ளார்.

மோகனச்சந்திரன் IAS

இந்த நிலையில் தற்பொழுது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த திரு.K.தர்ப்பகராஜ் IAS அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

tirupathur collector name details in tamil

தற்பொழுஊ திருப்பத்தூர் மாவட்டத்தின் 5வது புதிய மாவட்ட ஆட்சியராக பேரிடர் மேலாண்மை துறையில் இயக்குனராக பணிபுரிந்த திரு.V.மோகனச்சந்திரன்.IASஅவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் . இவர் முன்பு சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலராக இருந்தார்.