பணத்திற்காக மனைவியை கொலை செய்த கணவன்! சடலத்தை சூட்கேசில் தூக்கி சென்று எரித்த அவலம்!
ஆந்திராவில் பணத்திற்காக மனைவியை கொலை செய்து சடலத்தை எரித்த கணவரின் இந்த கோர செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த புவனேஸ்வரி, பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தார்.
இவருக்கும் சமூக ஆர்வலர் என்ற பெயரில் போலியாக ஊரை சுற்றி வரும் ஸ்ரீகாந்த் ரெட்டி என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது.
தன்னுடைய சுய விளம்பரத்திற்காக அவர் அவ்வப்போது தொலைக்காட்சிகளில் பேட்டிகள் கொடுப்பது, என அவரை பிரபலப்படுத்தி கொண்டு வந்துள்ளார்.
மேலும் அவருடைய சொந்த செலவுக்கு புவனேஸ்வரியின் வருமானத்தை பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பாதிக்கும் பணத்தை இபப்டி வீணாக செலவு செய்கிறாய் என கேட்டு அடிக்கடி புவனேஸ்வரி ஸ்ரீகாந்திடம் வாக்குவாத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் இவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்த போதிலும், ஸ்ரீகாந்த் புவனேஸ்வரியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனை தர மறுத்து புவனேஸ்வரியும் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர்கள் வசித்து வந்த அப்பார்ட்மெண்டில் வைத்தே புவனேஸ்வரியை கதற கதற கொலை செய்து, அவரது உடலை ஒரு பெரிய சூட்கேசில் மறைத்து எடுத்து சென்று எரித்துள்ளார்.
பின்னர் புவனேஸ்வரிக்கு டெல்டா ப்ளஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாகவும், இதனால் மருத்துவர்கள் புவனேஸ்வரியுன் உடலை தர மறுத்ததாகவும் ஊராரிடம் கதை கூறியுள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகள் உதவியோடு,
ஸ்ரீகாந்த்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.