நெல்லையப்பர் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட 4 வாசல்கள் - பக்தர்கள் மகிழ்ச்சி!
திருநெல்வேலி மாவட்டத்தின் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் உள்ள நான்கு வாசல்களும் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அமைச்சரின் உத்தரவின்படி திறக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பாதுகாப்பு கருதி கடந்த 2004-ம் ஆண்டு கோயிலின் 3 வாசல்களும் மூடப்பட்டு கிழக்கு வாசல் வழியாக மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
ஏதேனும் விஷேச நாட்களில் மட்டும் வடக்கு வாசலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அமைச்சர் சேகர் பாபு நெல்லையப்பர் கோவிலை ஆய்வு செய்தார். அப்போது 4 வாசல்களை திறக்க வேண்டும் என பக்தர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 4 வாசல்களையும் திறக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த நிலையில் இன்று காலை 11 மணி அளவில் 17 ஆண்டுகளுக்கு பிறகு
4 வாசல்களும் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.