திமுக செயலாளர் வெட்டிக் கொலை - போலீசார் தீவிர விசாரணை
திருநெல்வேலி அருகே திமுக செயலாளர் பொன்னுதாஸ் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியில் திமுக 38 வார்டு செயலாளராக இருப்பவர் அபே மணி என்ற பொன்னுதாஸ் .
இவர் இரவில் பணி முடிந்து வீடு திரும்பும்போது வீட்டின் வாசல் வரை பின்னால் ஆம்னி காரில் வந்த மர்ம நபர்கள் பொன்னுதாஸை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்தனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த அவரது தாயார் பேச்சியம்மாள் கூச்சலிட்டுள்ளார்.பின்னர் சத்தம் கேட்டு திரண்டு பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொலை செய்யப்பட்ட பொன்னுதாசின் தாயார் பேச்சியம்மாள் போட்டியிட விருப்பமனு பெற்றுள்ளார்.
இந்த அடிப்படையில் நாளை இதற்கான நேர்காணலில் தாயார் பேச்சியம்மாள் கலந்து கொள்ள இருந்த நிலையில் நகர்ப்புற தேர்தலின் உட்கட்சி பூசலில் ஏற்பட்ட மோதலால் நடந்த கொலையா அல்லது தொழில் ரீதியாக ஏற்பட்ட கொலையா என்ற அடிப்படையில் காவல்துறையினர் முதல்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் கொலை நடந்த இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், கொலை செய்யப்பட்ட பொன்னுதாஸ் குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கொலையில் நியாயம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மூலம் எடுப்பதாக உறுதியளித்தார்.
You May Like This