திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!
திருநெல்வேலி மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். 1790 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி தமிழ்நாட்டில் 6-வது பெரிய மாநகராட்சி ஆகும்.
அதில் இருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுவது உண்டு. திருநெல்வேலி மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும் கொண்டது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி ஆகும்.
திருநெல்வேலி பெயர் காரணம்
திருநெல்வேலி என்ற பெயரானாது, ”திரு-நெல்-வேலி” என்ற மூன்று தமிழ் வார்த்தைகளால் உருவாக்கப்பட்டு ”மேன்மையுடைய நெல்லுக்கு வேலி அமைத்த” ஊர் என்ற அர்த்தத்துடன் அழைக்கப்படுகிறது.
ஆற்காடு நவாப்பிடமிருந்து 1801-ல் பிரிட்டிஷார் இந்த நகரை கையகப்படுத்தி “Tinnevelly’ மாவட்டம் என பெயரிடப்பட்டு இராணுவ தலைமையிடமாக செயல்பட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்த வரை தாமிரபரணி,சிற்றாறு,மணிமுத்தாறு அணை,பாபநாசம் அணை,ஸ்ரீமுகப்பேரி அணை,கடனா அணை உள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் குற்றால அருவி அமைந்துள்ளது. தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் முக்கியமான ஒன்று.
இங்கு குளித்து மகிழ இயற்கையாக அமைந்த அருவிகளான ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவி அருவி, பேரருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி, தேனருவி என்று பல நீர்விழ்ச்சிகள் உள்ளன.நெல்லை மாவட்டத்தில் பிரபலமான நெல்லையப்பர் கோவில் உள்ளது.
மாவட்டம்ஆட்சியர்கள் விவரம்
திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் ஆட்சியராக S.R. லூஷிங்டன் என்பவர் 8 ஆகஸ் 1801 ஆம் ஆண்டும் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படார்.இவரை தொடர்ந்து ஜார்ஜ் பாரிஸ்,J. காகிறானே, J. ஹெபிபுர்ன்,J. அன்புரி,J. ஹெபிபுர்ன், J. ஹெபிபுர்ன்,J.G. டர்ன்புல் ,
தொடங்கி திரு. வி. விஷ்ணு என்பவர் வரை திருநெல்வேலி மாவட்டம்ஆட்சியராக சுமார் 216 பேர் பணியாற்றியுள்ளனர்.
செந்தில் குமார் ஐஏஎஸ்:
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தின் 217 வது மாவட்ட ஆட்சியராக ப.மு செந்தில் குமார்,பி.வி.எஸ்சி என்பவர் நியமிக்கப்பட்ட நிலையில் இரண்டு நாள்களில் தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு துறை நிர்வாக இயக்குனராக செந்தில் குமார்,பி.வி.எஸ்சிபணிமாறுதல் பெற்று சென்றார்.
கார்த்திகேயன் ஐஏஎஸ்
இதையடுத்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக இருந்த கார்த்திகேயன் நெல்லை மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்படார். டாக்டரான இவர் கடந்த 2014-ம் ஆண்டு இந்திய ஆட்சி பணிக்கு தேர்வானார்.
2 ஆண்டுகள் பயிற்சிக்கு பின்னர் நெல்லையில் பயிற்சி சப்-கலெக்டராகவும்,திருப்பத்தூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் சப்-கலெக்டராகவும் பணியாற்றினார். அதன்பின்னர் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் நெல்லை மாவட்ட ஆட்சியராக செயல்பட்டு வருகிறார்.