நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - பதற்றத்தை தடுக்க நெல்லை மாவட்டத்தில் 2000 போலீசார் பாதுகாப்பு
நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது மாவட்டம் முழுவதும் 933 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறுகிறது பதற்றத்தை தடுக்க 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள 55 வார்டுகளுக்கும் 408 பேரும் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், களக்காடு ஆகிய மூன்று நகராட்சிகளில் 282 பேரும்
17 பேரூராட்சிகளில் உள்ள 264 வார்டுகளுக்கு 1100 பேர் என மொத்தம் 387 பதவிகளுக்கு 1790 பேர் போட்டியிடுகின்றனர்.
தேர்தலில் மொத்தம் 3 லட்சத்து 67 ஆயிரத்து 921 ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 86 ஆயிரத்து 532 பெண் வாக்காளர்கள் இதர பிரிவைச் சார்ந்த ஐம்பத்தி ஒன்று உட்பட ஏழு லட்சத்து 54 ஆயிரத்து 504 பேர் வாக்களிக்கின்றனர்.
அதிகபட்சமாக ஒரு வாக்குச்சாவடிக்கு 1200 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக ஆண் வாக்காளர் வாக்குச்சாவடிகள் 259 பெண் வாக்காளர் வாக்குச்சாவடிகள் 259
வெறும் அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடிகள் 415 என மொத்தம் 933 வாக்குச்சாவடிகள் உள்ளன.
இதற்காக மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆயிரத்து 127 மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 1127 என 2254 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இதற்காக சுமார் 3 ஆயிரத்து 728 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணியில் உள்ளனர்.933 வாக்குச்சாவடிகளில் 70 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு மண்டலத்திற்கு 10 முதல் 15 வாக்குச்சாவடிகள் உள்ளன.
மாநகராட்சியின் 491 வாக்குச்சாவடிகளுக்கு 36 மண்டலமாகவும் 3 நகராட்சிகளுக்கு 8 மண்டலமாகும் 17 பேரூராட்சியில் 26 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது.
மண்டல அலுவலர்களாக 210 பேர் பயன்படுத்தப்படுகின்றனர் மாநகராட்சியில் 60 நுண் பார்வையாளர்களும், 3 நகராட்சியில 10 நுண் பார்வையாளர்கள், 17 பேரூராட்சிகளில் 30 நுண் பார்வையாளர்கள் என 100 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த நேரத்தில் வாக்கியங்கள் செயல்படுகிறதா மாதிரி வாக்குப்பதிவு நடைமுறைப்படுத்துதல் வாக்குச்சாவடிகளில் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்தல் போன்ற பணிகளை கவனித்து வருகின்றனர்.
ஒவ்வொரு வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரம் வாக்குபதிவு கட்டுப்பாட்டு இயந்திரம் உள்ளிட்ட அறுபத்தி எட்டு வகையான பொருட்கள் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட பாதுகாப்பைப் பொருத்தவரை 2700 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாநகர பகுதியில் 1200 காவலர்களும் புறநகர் பகுதியில் 1500 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புறநகர் பகுதிகளில் 18 ரோந்து வாகனங்களும் இன்ஸ்பெக்டர் தலைமையில் இருபத்திமூன்று பறக்கும் படையினரும் இரண்டு சக்கர வாகனத்தில் 52 ரோந்து பணியிலும் காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் 8 டிஎஸ்பி தலைமையில் அதிரடிப்படையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.