டீக்கடையில் சிலுவை : சீல் வைத்த தேவஸ்தான நிர்வாகம்

By Irumporai Jun 27, 2023 04:25 AM GMT
Report

திருப்பதியில் டீ க்கடையின் டீ கப்பில் சிலுவை இருந்ததை தொடர்ந்து அந்த கடைக்கு தேவஸ்தான நிர்வாகம் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 டீக்கடை கப்பில் சிலுவை

திருப்பதி திருமலை பகுதியில் இந்து மதம் தவிர பிற மத அடையாளங்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரு சிலர் மறைமுகமாக மற்ற மத அடையாளங்களை புகுத்து முயற்சி நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது.

டீக்கடையில் சிலுவை : சீல் வைத்த தேவஸ்தான நிர்வாகம் | Tirumala Tea Stall Sealed By Officers

கடைக்கு சீல்

    இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள திருமலையில் உள்ள டீக்கடையில் பேப்பர் கப்பில் சிலுவைச் சின்னம் இருந்ததாக கூறப்பட்டது.

இதனை அடுத்து சிலுவை சின்னம் இருந்த கடைக்கு தேவஸ்தான அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் திருப்பதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.