திருச்சி மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!
திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் 4 வது பெரிய நகரமாக உள்ளது. 1974 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, திருச்சி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
.திருச்சி மாவட்டம் திருச்சி ,லால்குடி,முசிறி, திருவரங்கம் என 4 வருவாய் கோட்டங்களும்,11 வருவாய் வட்டங்களும், 507 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது. திருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி. காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வெள்ளாறு போன்றவை வந்து சேர்கின்றன.
மாவட்ட ஆட்சியர்கள்
திருச்சி மாவட்டத்தின் முதல் ஆட்சியராக கே.மணிவாசன் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு திரு.வி.பாண்டியன் 02-06-2004 முதல் 30-06-2005 வரையிலும்,திரு. கே. நந்த கிஷோர் (02-06-2005- 02-06-2006) ஆஷிஷ் வச்சானி (03-06-2006முதல் 01-03-2008வரையிலும்,திரு. த.சௌண்டையா 02-03-2008முதல் 30-09-2010 வரையிலும் நியமிக்கப்பட்டனர்.
தொடர்ந்து திரு. மகேசன் காசிராஜன்,திருமதி. ஜெயஸ்ரீ முரளிதரன்,திரு. டாக்டர். கே.எஸ்.பழனிச்சாமி,திரு. கு.இராசமணி,திரு. சு.சிவராசு ,திருமதி. தொடங்கி S.திவ்யதர்ஷினி என சுமார்143 பேர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டனர்.
சு.சிவராசு ஐஏஎஸ்
இதனையடுத்து திருச்சி மாவட்டத்தின் 144வது மாவட்ட ஆட்சியராக திரு. சு.சிவராசு நியமிக்கப்பட்டார். கடந்த 2020-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் திறம்பட செயல்பட்டதற்காகவும், புதுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக மாநில அளவில் சிறந்த மாவட்ட தேர்தல் அலுவலருக்கான விருது வழங்கியது.
இதனையடுத்து தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, பெட்டவாய்த்தலை சோதனைச் சாவடியில் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகக் கூறி தேர்தல் ஆணையம் அவரை தற்காலிகமாக பணியிட மாற்றம் செய்திருந்தது.
அப்போதைய மாவட்ட ஆட்சியர் சிவராசனுக்கு பதிலாக திவ்யதர்ஷினி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பிறகு மீண்டும் மீண்டும் சிவராசு ஐ.ஏ.எஸ் திருச்சி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
பிரதீப் குமார் ஐஏஎஸ்
இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த சிவராசு வணிக வரித் துறை (கோவை) இணை ஆணையராக பணியிடம் மாற்றப்பட்டார். அதன் பிறகு திருச்சி மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக பிரதீப் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப்குமார், நாகப்பட்டினத்தில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கூடுதல் thiட்இயக்குநராக பணி புரிந்துள்ளார். பின்னர், ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட கிராமப்புற வளர்ச்சி முகமையின் திட்ட அதிகாரியாகவும் கூடுதல் ஆட்சியராகவும் (வளர்ச்சி) பணியாற்றியவர்.
தற்போது திருச்சி மாவட்ட ஆட்சியராக பிரதீப் குமார் கல்வி, விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் கூடுதல் கவனம் செலுத்துவதோடு, திருச்சியில் நீண்ட கால பிரச்சினையாக உள்ள பாதாள சாக்கடை கட்டமைப்பை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.