திருச்சி தி.மு.க பொதுக் கூட்டம்: தேர்தல் விதிகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்த போலீஸ்

police dmk stalin tiruchi
By Jon Mar 08, 2021 03:52 PM GMT
Report

திருச்சி சிறுகனூரில் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் திமுக பிரம்மாண்ட மாநாடு நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவின் இந்த பிரம்மாண்ட மாநாடு எழுச்சியை உண்டாக்கும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.

இந்த பொதுக்கூட்டத்திற்காக கட் அவுட்கள், திமுக கொடி என திருச்சி மாநகரம் களைகட்டியது. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், அடுத்த 10 ஆண்டுகளில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி ஏற்படும் .

 

ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வேலையில்லாத் திண்டாட்டம் சரிபாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் பொருட்கள் வாங்கும் அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் திருச்சி சிறுகனூரில் நேற்று திமுக பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில் 6 காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திருச்சி நகரில் மூன்று காவல் நிலையங்களிலும் மாவட்ட பகுதிகளில் மூன்று இடங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக பொதுக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக பொதுக்கூட்டம் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அரசு மற்றும் காவல்நிலையங்களில் அனுமதி பெற்ற பிறகே கூட்டம் நடந்துள்ளது. ஆனால் அதிகளவில் கூட்டம் கூடியதுடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.