திருச்செந்தூர் தரிசன டிக்கெட் விலை உயர்த்தப்படவில்லை- அமைச்சர் ரமேஷ் விளக்கம்
திருச்செந்தூர் தரிசன டிக்கெட் விலை உயர்த்தப்படும் என்ற தகவல் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது..,
மின்சாரத்துறையில் 50 சதவீத காலிப்பணியிடங்கள் உள்ளதால் இந்த ஆண்டிலேயே 15,000 பேர் நியமிக்கப்பட உள்ளனர் என்றார்.
மேலும், மின்சாரத்துறையில் 15,000 பேரை நியமிக்க முதலமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
தேர்வு செய்யப்படும் அனைவருக்கும் தனித்தனியாக பணி நியமன ஆணை வழங்கப்படும் என கூறினார்.

இதனைத்தொடர்ந்து, திருச்செந்தூர் தரிசன டிக்கெட் விவகாரத்தில் மக்களின் கருத்து மட்டுமே கேட்கப்பட்டதாகவும், கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் விளக்கமளித்தார்.
அதிகாரிகள் ஏற்கெனவே பரிசீலித்த நிலையில் கருத்து மட்டும்தான் தான் கேட்டோம், விலை உயர்த்தவில்லை என்று கூறினார்.
மக்கள் கூறுவதன்படி தான் அரசு செயல்படும் என்றும் மக்கள் முடிவை மீறி அரசு எந்த முடிவும் எடுக்காது என அமைச்சர் ரமேஷ் கூறினார்.
ஈரானுக்கு வழங்கப்பட்ட 60 நாட்கள் தடைத் தளர்வு தற்காலிகமானது...! அமெரிக்கா இறுதி எச்சரிக்கை IBC Tamil
திடீர் திருப்பம்: காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் - யாழ்ப்பாணத்தில் காதலன் மனைவியுடன் கைது IBC Tamil