காதலித்து கைவிட்ட காதலர் - கொட்டும் மழையில் போராட்டம் நடத்தும் காதலி
திருச்செந்தூரில் காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிய காதலர் வீட்டின் முன்பு அமர்ந்து கொட்டும் மழையிலும் பாதிக்கப்பட்ட பெண் போராட்டம் நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் மாவட்டம் மருதூர் கரையை சேர்ந்த திருமணிகுட்டி என்பவரும், நயினார்பத்து பகுதியை சேர்ந்த விஜயா என்பவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதல் மலர, இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு ரகசிய திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது விஜயாவின் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க வந்ததால், விஜயா தனது காதலை பற்றி வீட்டில் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயாவின் பெற்றோர் விஜயாவை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளனர்.
இதில் மனமுடைந்த விஜயா, காதல் கணவரான திருமணிகுட்டியிடம் சென்றுள்ளார். ஆனால் காதலரோ, உன்னை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறினேனே, ஏன் கூறினாய் என்று கைவிட்டுள்ளார்.
இதனால் நிர்கதியான விஜயா, போலீசில் புகார் அளித்ததோடு கொட்டும் மழையில் திருமணி குட்டி வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், திருமணிகுட்டி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.