திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடையா? எஸ்பி விளக்கம்!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இரவில் பக்தர்கள் தங்க தடை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும் வெளியூர், வெளி மாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இங்கு கடற்கரையில் தங்கி மறுநாள் அதிகாலை புனித நீராடி சாமி தரிசனம் செய்வோரின் வாழ்க்கையில் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.
தடை இல்லை
எனவே கடற்கரையில் தங்குவோரின் எண்ணிக்கை லட்சங்களில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடற்கடையில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதற்கு பக்தர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, தற்போது திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்க எந்த தடையும் இல்லை.
வடகிழக்கு பருவமழை, திடீர் மழை காரணமாக அந்த நேரத்தில் மட்டும் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடற்கரையில் தங்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் விளக்கம் அளித்துள்ளார்.