"அதிக ரேஷன் வேணும்ணா ஏன் 20 குழந்தைகள் பெற்றுக்கொள்ளவில்லை?" - பாஜக முதல்வர் மீண்டும் சர்ச்சை

minister chief children bjp Tirath Singh Rawat
By Jon Mar 23, 2021 04:55 PM GMT
Report

அதிகமான ரேஷன் பொருட்கள் வேண்டுமென்றால், அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். கிழிந்த ஜீன்ஸ் பற்றிய கருத்து வெளியான சில நாட்களிலேயே, உத்தரகண்ட் முதல்வர் திரத் சிங் ராவத் நேற்று மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட உத்தரகண்ட் முதல்வர் திரத் சிங் ராவத் கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் போது கூடுதல் ரேஷன் பெற மக்கள் அதிக குழந்தைகளை உருவாக்கியிருக்க வேண்டும் எனக் கூறியது தற்போது சர்ச்சையாகியுள்ளது. அவரது பேச்சில் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

ஒரு குடும்பத்தில் 10 பேர் இருந்தால் 50 கிலோ அரிசி கிடைக்கிறது. 20 பேருக்கு 100 கிலோ வழங்கப்படுகிறது. இதில் 2 பேர் உள்ள குடும்பத்தார்கள் அதிக எண்ணிக்கையிலுள்ள குடும்பத்தார்கள் அதிக அரிசி வாங்குவதைக் கண்டு பொறாமை கொள்கிறார்கள். ஏன் பொறாமைப்பட வேண்டும். உங்களுக்கும் நேரம் இருந்தால் 20 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாமே.

ஏன் இரண்டோடு நிறுத்திவிட்டீர்கள்” என்றார். ஏற்கனவே ஜீன்ஸ் பேண்ட் தொடர்பாக திரத் சிங் ராவத்தின் கருத்து இணையத்தில் பேசு பொருளானது. தற்போது அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.