உங்களுக்கு சாப்பிட்டதும் தூக்கம் வருதா? - கொஞ்சம் இதை ட்ரை பண்ணி பாருங்க...

healthtips controlsleepinessafterlunch controlsleepiness
By Petchi Avudaiappan Apr 03, 2022 11:57 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in ஆரோக்கியம்
Report

நம்மில் பலருக்கும் சாப்பிட்டதும் தூக்கம் வரும் பழக்கம் இருக்கும். இது வீட்டில் இருக்கும் போது ஓகே தான். ஆனால் பள்ளி, கல்லூரி, தேர்வு, அலுவலகம், முக்கிய விழாக்கள் என்றால் கொஞ்சம் சிக்கல் தான். 

இதற்காக தயாராகுபவர்கள் சாப்பிட்டால் தூக்கம் வரும் என்பதற்காக சாப்பிடாமல் இருப்பார்கள். இத்தகைய பிரச்சனையை நாம் எளிதாக கையாளலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  • ஒவ்வொரு வேளை உணவு முடிந்த பின்னும் ஏற்படும் அசதியை தவிர்க்க நாம் சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.  வெளியில் சென்று தான் நடக்க வேண்டும் என்று இல்லை. இருக்கும் இடங்களில் உள்ள மாடிப் படிகளில் ஏறி,இறங்கினாலே சுறுசுறுப்பான எனர்ஜியை பெறலாம். 
  • மூளையை ஆக்டிவ்வாக வைத்துக் கொள்ள உதவும் சுவிங்கம் மதியம் சாப்பிட்டு முடிந்ததும் ஏற்படும் தூக்கத்தை கட்டுப்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • உடலில் நீர்ச்சத்தும் தண்ணீரின் அளவும் குறையும் போது இயல்பாகவே நம் உடல் சோர்வடைந்து தூக்கத்தை நாடும். அதனை தடுக்க அவ்வப்போது உடலுக்குத் தேவையான தண்ணீரைக் குடிப்பது அவசியமாகிறது. குறிப்பாக மதிய உணவு சாப்பிட்டு முடித்த பின் நிறைய தண்ணீர் குடிப்பது மிக முக்கியம். 
  • ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டால் இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.  இலை வடிவ காய்கறிகள், புரதச்சத்து நிறைந்த சிக்கன், மீன், முட்டை, பாதாம் மற்றும் கார்போ உணவுகளான பீன்ஸ், முழு தானியங்கள், பருப்பு வகைகள் ஆகியவை உண்ணலாம்.
  • அதேபோல் சாப்பிடும் அளவு என்பது மிக முக்கியம். உடல் சோர்வாக இருக்கும்போதும், தூக்கமாக இருக்கும்போதும் வழக்கத்தை விட  குறைவாகவே சாப்பிடுங்கள். அதேபோல நாள் முழுக்க மூன்று வேளையில் சாப்பிடும் உணவைப் பிரித்து 6 வேளையாக உண்ணலாம். 

இவற்றையெல்லாம் விட மதியம் நீங்கள் சாப்பிடுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.இதனை நாம் தொடர்ந்து பின்பற்றினால் நிச்சயம் சீக்கிரம் இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.