முடி அடர்த்தையாகவும் பளப்பளப்பாகவும் வளர வேண்டுமா? - இதை செய்தாலே போதும்

tips hair growth volume density diy tips
By Swetha Subash Feb 01, 2022 01:07 PM GMT
Swetha Subash

Swetha Subash

in அழகு
Report

முடி நன்கு அடர்த்தையாகவும் பளப்பளப்பாகவும் வளர இந்த மூன்று விஷயங்களை செய்தாலே போதும்,

1. கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, சின்ன வெங்காயம் நான்கு இவை இரண்டையும் நன்றாக அரைத்து, ¼ கப் தயிர் கலந்து தலையில் தேய்த்து மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

பின்பு 15 நிமிடங்கள் கழித்து குளிக்கலாம். இவ்வாறு அவ்வப்போது செய்து வந்தால் கூந்தல் கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

2. வெந்தயத்தை ஊறவைத்து, நன்றாக அரைத்து தலையில் ‘பேக்' போல போட்டுக் கொள்ளவும். 15 நிமிடங்கள் ஊறிய பிறகு தலைக்கு குளிக்கவும். இதன் மூலம் தலைமுடி அடர்த்தியாக செழித்து வளரும்.

3. செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறிய பின்பு சீயக்காய் அல்லது இயற்கையான முறையில் தயாரித்த ஷாம்பு போட்டு குளிப்பதன் மூலம் கூந்தல் அடர்த்தியாக வளரும்.