குன்றின் மீது 392 அடி உயரத்தில் அமைந்துள்ள பெட்டிக்கடை; உலகின் மிகவும் வசதியற்ற கடையாம் - அதிசயம்!
குன்றின் மீது 392 அடி உயரத்தில் அமைந்துள்ள பெட்டிக்கடை ஒன்று இணையவாசிகளை கவர்ந்துள்ளது.
உலகின் வசதியற்ற கடை
இயற்கையை அதிசயங்களை தவிர, மனிதர்களால் உருவாக்கப்பட்ட பிரமிக்க வைக்கும் கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகளையும் சீன பெருமையாக கொண்டுள்ளது. அந்த வகையில் சீனாவில் உள்ள உயரமான ஒரு மலைக் குன்றின் மீது சில்லறை கடை போன்ற கன்வீனியன்ஸ் ஸ்டோர் ஒன்று உள்ளது.
இது குன்றின் பக்கத்தில் 392 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது உலகின் மிகவும் வசதியற்ற கன்வீனியன்ஸ் ஸ்டோர் என்று அழைக்கப்படுகிறது காந்த 2018ம் ஆண்டு ஹூனான் மாகாணத்தில் உள்ள பிங்ஜியாங் கவுண்டியில் உள்ள ஷினியுஜாய் தேசிய புவியியல் பூங்காவில் இந்த குட்டி கடை திறக்கப்பட்டது.
மலையின் ஓரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் சிறிய மரப்பெட்டியாலான இந்த கடை அங்கு மலையேறுபவர்களின் தேவையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மலையேறுபவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும், புத்துணர்வு அடையவும் இது பயன் படுகிறது.
இணையத்தில் வைரல்
இந்த கடையில் தண்ணீர், குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் போன்ற சில பொருட்கள் மட்டுமே கிடைக்கும். இயற்கை காட்சியுடன் ஒரு தனித்துவமான ஒரு ஷாப்பிங் அனுபவத்தை வழங்க, தொழிலாளர்கள் ஜிப்லைன்களை பயன்படுத்தி இந்த கடைக்கு தேவையான பொருட்களை நிரப்புகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இந்த சிறிய கடையில் ஒரே ஒரு ஊழியர் மட்டுமே பணிபுரிகிறார். இதன் புகைப்படங்களை அங்கு சென்ற பல பேர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த கடை இணையவாசிகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.