டிம் சவுத்தி விரித்த வலையில் ஈசியாக சிக்கி விக்கெட்டை பறிகொடுத்த ஜடேஜா - ரசிகர்கள் சோகம்

newzealand jadeja tim southee
By Anupriyamkumaresan Nov 29, 2021 10:46 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி கான்பூர் மைதானத்தில் 25ம் தேதி துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 345 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 52 ரன்களும், ஜடேஜா 50 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான டாம் லதாம் 95 ரன்களும், வில் யங் 89 ரன்களும் எடுத்து கொடுத்தாலும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 296 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அக்‌ஷர் பட்டேல் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திர அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்பின் 49 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில் 1 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.

இதனால் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 14 ரன்கள் எடுத்திருந்தது. போட்டியின் நான்காம் நாளான இன்றைய ஆட்டம் துவங்கிய சில நிமிடத்திற்குள் புஜாரா (22) விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

புஜாராவை தொடர்ந்து களமிறங்கிய ரஹானேவும் (4) இந்திய அணிக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். இதன்பின் வந்த ஜடேஜாவும் ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை இழந்ததன் மூலம் 30 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 80 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.