பாத்ரூம் வாசலில் டைமர்; மிரண்டு போன மக்கள் - காரணத்தை கேட்டா அவ்வளவுதான்..
டாய்லெட்களில் கதவில் டைமர் பொருத்தப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
டாய்லெட்டில் டைமர்
சீனாவில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று யுங்காங் க்ரோட்டஸ். அங்கு டடோங் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தளத்தில் சுமார் 51 ஆயிரம் புத்த சிலைகளும் 250க்கும் மேற்பட்ட குகைகளும் உள்ளன.
5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டுகளை சேர்ந்த இந்த குகைகளில், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காட்டும் விதமாக பல ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அதிக அளவில் இங்கே சுற்றுலாவிற்கு வருகிறார்கள். எனவே, இயற்கை உபாதைகளை கழிக்க டாய்லட் வசதியும் செய்யப்பட்டு இருக்கும்.
அசரவைக்கும் விளக்கம்
இந்நிலையில், வினோதமாக பெண்களுக்கான டாய்லட்களில் கதவில் டைமர் ஒன்றும் பொருத்தியுள்ளனர். ஒருவர் டாய்லட் உள்ளே சென்றதில் இருந்து ஒவ்வொரு வினாடிகளும் கணக்கெடுத்து எவ்வளவு நேரமாக உள்ளே இருக்கிறார்கள் என்பதை காட்டும்.
இதற்கு பதிலளித்து அங்குள்ள அதிகாரிகள், "இங்கே வரும் கூட்டத்தை சமாளிக்கவே இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துள்ளோம். யார் எவ்வளவு நேரம் செல்கிறார்கள் என கணக்கெடுப்பது இல்லை. டாய்லட்டை யாரும் பயன்படுத்துகிறார்களா? என காட்டவே இப்படி ஒரு ஏற்பாடு” எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது இதுகுறித்த வீடியோ வெளியாகி நெட்டிசன்கள் பலரும் காட்டமாக இதனை விமர்சித்து வருகின்றனர்.