மும்பை அணியில் இருந்து மிக முக்கிய வீரர் விலகல் - ரசிகர்கள் அதிர்ச்சி
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை அணி வீரர் விலகியுள்ளதால் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்கும் நிலையில் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு தலா 5 அணிகள் இடம் பெற்றுள்ளது.
இதனிடையே இந்த தொடரில் இருந்து மும்பை அணி முதல் அணியாக வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ள நிலையில் எஞ்சியுள்ள போட்டிகளிலாவது ஜெயிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தொடரில் மும்பை அணி விளையாடியுள்ள 9 போட்டிகளில் 1 ல் மட்டும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர் டைமல் மில்ஸ் காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் விலகியுள்ளார். ஏற்கனவே சரியாக பவுலர் இல்லாமல் திணறி வரும் மும்பைக்கு இது நிச்சயம் பின்னடைவாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டைமல் மில்ஸ்க்கு பதிலாக தென் அப்பரிக்கவை சேர்ந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மாற்று வீரராக அணியில் இணைந்துள்ளார்.