தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்; தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு

Diwali Tamil nadu
By Karthikraja Nov 03, 2026 03:18 PM GMT
Report

time limit for burst crackers on diwali in tamilnadu: தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு

 நவம்பர் 8 ஆம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

வெளியூரில் வசிப்பவர்கள் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல, சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்; தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு | Time Limit For Burst Crackers Diwali In Tamilnadu

மேலும், சொந்த ஊர்களுக்குச் செல்வோரின் வசதிக்காக நவம்பர் 9ஆம் தேதியும் தமிழ்நாடு அரசு, அரசு விடுமுறையை அறிவித்துள்ளது.

அதேவேளையில், பட்டாசு வெடிப்பதற்கான நேரக்கட்டுப்பாட்டை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், 2018 ஆம் ஆண்டிலிருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கபடுகிறது.

அதே போல், இந்த ஆண்டும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்கள், குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

பொதுமக்கள், அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் சரவெடி போன்ற பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் எனவும், குறைந்த ஒலியுடன் குறைந்த காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.