ஆஸ்திரேலியா எங்களுக்கு தூசி மாதிரி... வீட்டுக்கு அனுப்புறோம் பாருங்க : நியூசிலாந்து வீரர் பேச்சு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிக்காக நியூசிலாந்து அணி கடுமையாக போராடும் என நியூசிலாந்து அணியின் டிம் சவுத்தி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் துபாயில் இன்றிரவு மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால் இப்போட்டி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதி போட்டி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் சீனியர் வீரரான டிம் சவுத்தி கூறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலிய அணி வலுவான அணியாக உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு நாங்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இறுதி போட்டியில் விளையாடியது இல்லை.
ஆனால் ஆஸ்திரேலிய அணி தற்போது முழு பலத்துடன் இல்லை என்பது தெரியும். நாங்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி.20 தொடரை சமீபத்தில் தான் வென்றுள்ளோம். ஆஸ்திரேலிய அணி ஆபத்தான அணி என்பதில் சந்தேகம் இல்லை. இறுதி போட்டியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்று தெரிவித்தார்.
அதேசமயம் ஆஸ்திரேலிய அணி அதிக ஆபத்தானது என்றாலும் எங்களுக்கு பயம் கிடையாது. நாங்கள் இந்த தொடர் முழுவதும் சவாலான அணிகளை எதிர்கொண்டு தான் இறுதி போட்டி வரை தகுதி பெற்றுள்ளோம்.
ஆஸ்திரேலிய அணியும், இங்கிலாந்து அணியை போன்ற வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டது தான். பந்துவீச்சாளராக எங்களது வேலை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்குள் வைத்து கொள்வது தான். வெற்றிக்காக நிச்சயம் கடுமையாக போராடுவோம் என டிம் சவுத்தி தெரிவித்துள்ளார்.