8 வயது சிறுமிக்காக நியூசிலாந்து வீரர் செய்த செயல் - ரசிகர்கள் பாராட்டு
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்காக நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர் டிம் சவுத்தி உதவி செய்ய முன்வந்தது பாராட்டைப் பெற்றுள்ளது.
Hollie Beattie என்ற அந்த சிறுமி நியுராப்பிலாஸ்டோமா வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவுவதற்காக தனது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் ஜெர்சியை சவுத்தி ஏலத்தில் விட்டுள்ளார்.
டிரேட்மி என்ற தளத்தில் ஜூலை 8 ஆம் தேதி மதியம் 1.45 மணி வரை இந்த ஏலம் லைவில் இருக்கும். இந்த ஜெர்சியில் அனைத்து நியூசிலாந்து அணி வீரர்களும் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதில் கிடைக்கும் அனைத்து நிதியையும் அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 8 வயது பெண் குழந்தை Hollie Beattie குடும்பத்திடம் அவரது சிகிச்சைக்காக கொடுக்க உள்ளதாக சவுத்தி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அனைவரிடத்திலும் பாராட்டைப் பெற்றுள்ளது.