தன்னை ரன் அவுட் செய்த சூர்யகுமாரை தீட்டித் தீர்த்த திலக் வர்மா - ரசிகர்கள் அதிர்ச்சி

IPL2022 TATAIPL MIvPBKS Tilakvarma Suriyakumaryadav
By Petchi Avudaiappan Apr 13, 2022 11:11 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை வீரர் திலக் வர்மா அவுட்டான நிலையில் அவர் திட்டியபடி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மகாராஷ்ட்ராவில் நேற்று நடந்த 23வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.

இதனைத் தொடர்ந்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட மும்பை அணியில் டெவால்ட் பிரெவிஸ் 49, திலக் வர்மா 36, சூர்யகுமார்யாதவ் 43 ரன்கள் எடுத்தாலும் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் 20 ஓவர்களில் மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

இதன்மூலம் மும்பை அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் தோற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது. இப்போட்டியில் மும்பை வீரர் திலக் வர்மா தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். அதன்பின் பெவிலியன் திரும்பிய அவர் திட்டியபடியே செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.