இனி அமெரிக்காவில் டிக் டாக் தடையில்லை .. தடையை நீக்கினார்அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிக் டாக் மற்றும் வீ சாட் ஆகிய சீன செயலிகளுக்கு வித்திருந்த தடையினை ரத்து செய்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்து முன்னாள் அதிபர் டிரம்பின் நிர்வாக உத்தரவுகளை நீக்கி வருகிறார்.
அதிபராக பணியினை தொடங்கிய முதல் நாளிலேயே பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றில் மீண்டும் அமெரிக்கா இணையும் உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.
மேலும் டிரம்ப் மெக்சிகோவிலிருந்து அகதிகள் நுழையாமல் இருக்க எல்லை சுவர் கட்டும் பணிகளை நிறுத்தினார்.
Biden is a slave to China. Biden revokes and replaces Trump orders banning TikTok and WeChat - The Verge https://t.co/Pw5lBL277k
— America First ?? (@dantolick) June 9, 2021
அந்த வகையில் சீன செயலிகளான டிக் டாக் மற்றும் வீ சாட்டிற்கு முன்னாள் அதிபர் டிரம்ப் தடை உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் அதிபர் ஜோ பைடன், டிக் டாக், வீ சாட்டிற்கு எதிரான டிரம்பின் நிர்வாக உத்தரவுகளை ரத்து செய்து கையெழுத்திட்டிருக்கிறார்.
அதே சமயம் அந்த செயலிகளின் பாதுகாப்பு குறித்து ஆராய உத்தரவிட்டுள்ளார்..