டிக்டாக் பிரபலம் சுகந்தி கைது - சைபர் கிரைம் போலீசார் அதிரடி
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அடுத்துள்ள நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுகந்தி.
டிக்டாக்கில் பிரபலமானவர்களில் ஒருவர் மதுரை சுகந்தி இவரது கணவர் ராணுவத்தில் வேலை பார்ப்பதாக கூறப்படுகிறது.
பொழுதுபோக்கிற்காக டிக்டாக்கில் வீடியோக்கள் செய்த சுகந்தி ஆபாசமாக வீடியோக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
அவருடன் பழகிய நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்தது அக்கிராமத்தினர் மத்தியில் எதிர்ப்புகளை கிளப்பியது.
ஒரு வீடியோவில் சுகந்தியையும் சுகந்தி கிராமத்தில் உள்ள பெண்களையும் ஒரு இளைஞர் ஆபாசமாக பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆத்திரமடைந்த கிராம மக்கள், சொந்த ஊரைவிட்டு சுகந்தியை துரத்தி விட்டனர். அப்போதும் கூட, வீடியோக்களை வெளியிடுவதை சுகந்தி நிறுத்தவில்லை.
டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக சுகந்தி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் டிக்டாக்கில் பிரபலமான திவ்யாவுடன் இவர் அடிக்கடி சண்டையிடும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.
இந்நிலையில் டிக் டாக் சுகந்தியை மதுரை மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒத்தக்கடையை சேர்ந்த பெண் ஒருவர் தனது புகைப்படங்களை சுகந்தி ஆபாசமாக பதிவேற்றம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில், மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேனியில் சுகந்தியை கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.