பிரபல டிக்டாக் ஜோடியான பேபி சூர்யா-சிக்கா மதுரையில் அதிரடியாக கைது ; காரணம் இதுதானா?
டிக் டாக் பிரபலங்கலான ரவுடி பேபி சூர்யாவும், சிக்காவும் புகார் ஒன்றில் கைதாகியுள்ளனர்.
திருப்பூரைச் சேர்ந்த ரவுடி பேபி சூர்யா, மதுரையைச் சேர்ந்த சிக்கா என்பவருடன் மதுரை திருநகரில் வசித்து வந்தார். இருவரும் சமீபத்தில் பிரிந்தனர்.
டிக்டாக் பிரபலமான இவர்கள், டிக்டாக் தடைக்கு பின் யூடியூப் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.
பெரும்பாலும் ஆபாச வார்த்தைகளை இவர்கள் பயன்படுத்துவதாகவும், சிலர் மீது அவதூறு பரப்புவதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் , இவர்களை கைது செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் இதற்கு முன் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் ரவுடிபேபி சூர்யா மற்றும் சிக்கா மீது கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் பெறப்பட்டது.
அதன் அடிப்படையில், மதுரை விரைந்த கோவை போலீசார், ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது முன்னாள் காதலன் சிக்காவை கைது செய்து தற்போது கோவை அழைத்து வருகின்றனர்.