டிக்டாக் பிரபலம் டான்ஸர் ரமேஷ் தற்கொலை - ஷாக்கான ரசிகர்கள்...!
டிக்டாக் பிரபலம் டான்ஸர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
டிக்டாக் பிரபலம் டான்ஸர் ரமேஷ் தற்கொலை
டிக்டாக் மூலம் பிரபலமானவர்தான் டான்ஸர் ரமேஷ். இவர் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் நடினமாடியுள்ளார். மேலும், தனியார் தொலைக்காட்சியில் ரமேஷ் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும், சமீபத்தில் நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் நடனமாடியுள்ளார்.
டிக்டாக் ரமேஷூக்கு 2 மனைவிகள் உள்ளனர். 2 மனைவிகளுடன் மாறி, மாறி ரமேஷ் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், முதல் மனைவிக்கு இன்று பிறந்தநாள் என்பதற்காக முதல் மனைவியை சந்திக்க ரமேஷ் சென்றதாக சொல்லப்படுகிறது. முதல் மனைவி பிறந்தநாளான்று இன்று டான்ஸர் ரமேஷ், அடுக்கு மாடி குடியிருப்பின் 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டிக்டாக் பிரபலம் டான்ஸர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.