நான் சொல்றத நம்புங்கள் நாங்க உளவாளி இல்லை : டிக் டாக் சி இ ஓ விளக்கம்

TikTok
By Irumporai Mar 25, 2023 05:39 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்கர்களை உளவு பாரத்து சீன அரசுக்கு தகவல் வழங்கவில்லை என்று டிக் டாக் சி இ ஓ கூறியுள்ளார்.

உளவு பார்த்த டிக் டாக்

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக டிக் டாக் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது, இந்த நிலையில் டிக் டாக் அமெரிக்க மக்களின் தகவல்களை சீனாவுக்கு விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் அமெரிக்கா முழுவதும் டிக் டாக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயக, குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். இதில் டிக் டாக் மீதான குற்றச்சாட்டிற்கு விளக்கமளிக்க அதன் சிஇஓ சவ் சி சூவ் நாடாளுமன்றக் குழுவின் முன் ஆஜரானார். 

நான் சொல்றத நம்புங்கள் நாங்க உளவாளி இல்லை : டிக் டாக் சி இ ஓ விளக்கம் | Tiktok Ceo Grilled Over Alleged China Data

உளவு பார்க்கவில்லை

அங்கு அவர் பேசும்போது, எங்கள் நிறுவனம் சீனாவுக்காகவோ, பிற நாடுகளுக்காகவோ செயல்படவில்லை என்று நான் உறுதியாக கூறுகிறேன். எங்கள் தளத்தை 150 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் விரும்புகின்றனர். அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்பது நன்கு தெரியும் என்றும் டிக் டாக் உளவு பார்க்கிறது என்ற செய்தி முற்றிலும் கற்பனையாது என கூறினார்.