டிக்டாக் ரெடியா இருக்கு ஆனால் மத்திய அரசுதான் - சுப்பிரமணிய சுவாமி ட்வீட்

tweet tiktok ladakh subramaniam
By Jon Apr 05, 2021 01:03 PM GMT
Report

டிக்டாக் மீண்டும் இந்தியாவிற்கு வர தயாராக இருப்பதாகவும், மத்திய அரசு லடாக் விவகாரத்தை கருத்தில் கொண்டு அமைதி காப்பதாக, பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சுப்பிரமணியசாமி தனது ட்வீட்டர் பதிவில் ஒரு பத்திரிகை செய்தியை சுட்டிக் காட்டியுள்ளார், டிக்டாக் இந்தியாவுக்கு வர தயாராக இருக்கிறது.

மத்திய அரசுக்கு ஏற்றார் போல் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. ஆனால் மத்திய அரசுதான் லடாக் விவகாரத்தை மனதில் வைத்துக் கொண்டு அமைதி காக்கிறது என தனது ட்விட்டரில் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் டிக்டாக்கின் பைட் டான்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது தொடர்பாக கடந்த வாரம் மும்பை உயர்நீதிமன்றத்தில் எந்தவித உடனடி தீர்வும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.