டிக் டாக் பிரபலர் ஜி .பி முத்து மீது காவல் நிலையத்தில் புகார்.. காரணம் என்ன?
பிரபல டிக்டாக் பிரபலர் ஜிபி முத்து மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
டிக் டாக் மூலம் பிரபலமானவர் தமிழகத்தில் பலர், அந்த வகையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் ஜிபி முத்து.
இயல்பான நெல்லை தமிழில் வணக்கம் டிக்டாக் நண்பர்களே என்பதும் அதே சமயம் கோபம் வரும் போது எலே செத்த பயலே என்பதும் இவரது வீடியோவில் புகழ்பெற்றவை.
ஆரம்ப காலத்தில் இவரது வீடியோ முகம் சுழிக்கும் வகையில் இருந்தாலும் கடந்த சில மாதமாக தனது பேச்சில் நாகரிகத்தை கடைபிடித்து வந்தார்.
இந்த நிலையில் இவர் மீது ஒருவர் இராமநாதபுரத்தை சேர்ந்த முகைதீன் இப்ராகிம் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரில் கடந்த சில மாதமாக சமூகவலைத்தளங்களில் இளைய சமூகத்தினரை கெடுக்கும் வகையில் ஜிபிமுத்து, திருச்சி சாதனா, பேபி சூர்யா சிக்கா ஆகியோர் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் இளைய சமுதாயத்தினரை பாதிக்கும் வகையில் பேசி வருகின்றனர்.
ஆகவே,இவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
