டிக்டாக் அபிராமியின் சகோதரர் தற்கொலை
கள்ளகாதல் விவகாரத்தில் பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த டிக்டாக் அபிராமியின் சகோதரர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
டிக்டாக் கள்ளகாதலனுக்காக தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் வைத்து கொன்ற அபிராமியை யாரும் மறந்திருக்க முடியாது.
கொலை வழக்கில் அவர் சிறையில் உள்ள நிலையில் அவரது சகோதரர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அபிராமியின் சகோதரர் பிரசன்ன மணிகண்டன் (27) தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார்.
அவர் மாலை பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபிறகு நீண்ட நேரமாக செல்போனில் யாருடனோ சண்டை போட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் இரவு தனது அறைக்கு சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாங்காடு போலீசார் சடலத்தை கைபற்றி விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் மணிகண்டன் சில ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் இருவருக்குமான பிரச்னையில் பெண் மணிகண்டனை பிரிந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் சோகமுடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.