தகாத உறவால் வீதிக்கு வந்த குடும்பம்... டிக்டாக் புகழ் லயாவுக்கு இந்த நிலைமையா?

Tiktok Laya tiktok fame laya laya dharmaraj
By Petchi Avudaiappan Aug 05, 2021 09:52 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report
102 Shares

திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிக்டாக் புகழ் லயா குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிக்டாக்கில் சமூகம் சார்ந்த கருத்துக்களை பேசி உத்வேகமளிக்கும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் லயா தர்மராஜ். இவரது தங்கை திவ்யாவுக்கும், திண்டுக்கல் மாவட்டம் சின்னையாபுரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரன் எனவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தையும் உள்ள நிலையில் ராஜேஸ்வரன் கடந்தாண்டு யுபிஎஸ்சி தேர்வெழுதுவதற்காக மதுரை சென்றுள்ளார்.

தகாத உறவால் வீதிக்கு வந்த குடும்பம்... டிக்டாக் புகழ் லயாவுக்கு இந்த நிலைமையா? | Tik Tok Laya Protest In Dindigul Sp Office

அப்போது அங்கு படித்து வந்த ஏற்கனவே திருமணமான நாகராணி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் திவ்யாவுக்கு தெரிய வர கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கணவன் வட மதுரையில் ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்துகொண்டு தன்னை ஏமாற்றுவதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் திண்டுக்கல் அனைத்து மதுரை காவல் நிலையத்தில் திவ்யா புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் ஒருநாள் கூட ராஜேஸ்வரனை அழைத்து போலீசார் விசாரிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் டிக்டாக் புகழ் லயா தனது தங்கை திவ்யாவையும், பெற்றோரையும் அழைத்து வந்து திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து லயா மற்றும் அவரது தங்கையை சமாதானப்படுத்திய போலீசார் ராஜேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.