நீச்சல் உடை எப்பவுமே அழகுதான் : கமல்ஹாசன் மனைவிக்கு பாராட்டு தெரிவித்த பிரபல நடிகை
நீச்சல் உடை ஆடைகளை வடிவமைத்து கொடுத்த கமல்ஹாசனின் முன்னாள் மனைவிக்கு பிரபல நடிகை பாராட்டு தெரிவித்துள்ளார்.
டிக் டிக்
கமல்ஹாசன் ,ராதா,ஸ்வப்னா, மாதவி நடிப்பில் வெளியான திரைப்படம் டிக் டிக் டிக் இந்த படம் கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியாகி சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்த நாயகிகளான ராதா, ஸ்வப்னா,மாதவி ஆகியோர் நீசல் உடையில் தோன்றி அப்போதைய கால கட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினர்.
கமல்ஹாசன் மனைவிக்கு பாராட்டு
இதனை பதிவு செய்துள்ள நடிகை ராதா தனது ட்விட்டர் பக்கத்தில் டிக் டிக் டிக் படத்தின் படப்பிடிப்பின்போது எனக்கு மிகவும் பிடித்த நினைவுகளில் இதுவும் ஒன்று. நீச்சல் உடைய அணிவது அப்போது வேலையின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால் நாங்கள் அப்போது சந்தித்த போராட்டங்கள் அதை வலிமையால் சமாளித்த விதத்தை பார்த்து எங்களை நாங்கள் பாராட்டி கொள்கிறோம்.
This is one of my favourite memory from the days of shoot for movie tik tik tik. Back then it might have looked part of job but now if I look back I admire the struggle and strength we have put in to look so, and special admiration goes to Madhavi who has that effortless look on pic.twitter.com/d6SV5iVGjb
— Radha Nair (@ActressRadha) March 21, 2023
குறிப்பாக மாதவிக்கு எனது சிறப்பு பாராட்டுக்கள்
சில நினைவுகள் இப்போது திடீரென வந்ததால் அதை நான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். குறிப்பாக எங்கள் ஆடை வடிவமைப்பாளர் வாணி கணபதியின் அழகான ஆடை வடிவமைப்பிற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.