சுற்றி சுற்றி டூயட் பாடிய ‘டிக்டாக்’ சூர்யா - சிக்கா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சுற்றி சுற்றி டூயட் பாடிக்கொண்டும், கவர்ச்சியை காட்டி சமூகவலைத்தளத்தில் பறந்து கொண்டிருந்த ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
டிக்டாக்கில் பிரபலமானவர்தான் சுப்புலட்சுமி என்ற சூர்யா. இவரை ‘ரவுடி பேபி’ என்று இணையதளவாசிகளால் பெயர் எடுத்தார். டிக்டாக் மூலம் சிக்கா என்பவருடன் காதல் ஏற்பட்டு ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இவர்கள் அடித்த லூட்டிக்கு அளவே இல்லை. மரத்தை சுற்றி சுற்றி டூயட் பாடி காதல் பறவைகள் போல பறந்தனர்.
ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் பிரிய, சமூகவலைத்தளத்தில் ஒருவரையொருவர் ஆபாசமாக பேசத் தொடங்கினர்.இது பார்ப்பவர்களுக்கு எரிச்சலையூட்டியது. நெட்டிசன்கள் பலர் இவர்களுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
கோவையை சேர்ந்த யூடியூப் சேனல் நடத்தும் பெண்மணி குறித்து இவர்கள் இருவரும் ஆபாசமாக பேசியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதைனையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சூர்யா மற்றும் சிக்கா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில் சூர்யாவையும் சிக்காவையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், சிறையில் உள்ள சூர்யா மற்றும் சிக்கா இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சுற்றித்திரிந்த காதல் பறவைகள் இப்போ கூண்டுக்குள் அடைக்கப்பட்டுவிட்டார்களே... என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.