3 ஆண்டுகள்.. 200 கிமீ.. தனது காதலியை தேடி நெடுந்தூரம் பயணித்து வந்த புலி - சுவாரஸ்ய நிகழ்வு!

World Russia Social Media
By Swetha Dec 18, 2024 11:45 AM GMT
Report

பெண் புலியை தேடி 3 ஆண்டுகள் பயணம் செய்து ஆண் புலி வந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புலி 

கடந்த 2012ம் ஆண்டு ரஷ்யாவில் சிஹோடா மலைப்பகுதியிலிருந்து இரண்டு புலிக்குட்டிகள் மீட்கப்பட்டன. அதில் பெண் புலிக்கு ஸ்வேத்லயா என்றும், ஆண் புலிக்கு போரீஸ் என்று வன அதிகாரிகள் பெயர் சூட்டினர்.

3 ஆண்டுகள்.. 200 கிமீ.. தனது காதலியை தேடி நெடுந்தூரம் பயணித்து வந்த புலி - சுவாரஸ்ய நிகழ்வு! | Tiger Travels 200Km In 3Yr To Find His Girlfriend

இந்த இரண்டு புலிகளும் கிட்டதட்ட 1.5 வருடம் ஒன்றாக வளர்க்கப்பட்டுள்ளன. அதன் பிறகு வனத்தில் திறந்துவிடலாம் என்று வனத்துறையினர் முடிவு செய்து, தனித்தனியாக இவை இரண்டையும் விட்டு வந்துள்ளனர். குறிப்பாக ஸ்வேத்லயாவை போரீஸிடம் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் விட்டுள்ளனர்.

அதாவது சைபீரியா வனப்பகுதியில் போரீஸ் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில்,சைபீரியா பகுதியில் விடப்பட்ட போரீஸ் அந்த இடத்தை தனது இருப்பிடமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே, தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருந்திருக்கிறது.

200 கிமீ

மறுப்புறம் ஸ்வேத்லயாவோ வேறு எங்கும் செல்லாமல் தன்னை விட்ட இடத்திலேயே சுற்றி திரிந்துள்ளது. இரண்டு புலிகளின் நடமாட்டத்தை கண்டு ஆச்சரியம் அடைந்த வனத்துறையினர் என்னதான் நடக்கிறது என்று தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.

இப்படியே மூன்று ஆண்டுகளாக பயணம் செய்த போரீஸ் ஸ்வேதலயா இருக்கும் இடத்தை வந்தடைந்தது. அதை பார்த்த வன துறையினர் ஆச்சரியமடைந்தனர். இந்த காதலுக்கு குறுக்கே நிற்க வேண்டாம் என்று இரண்டையும் ஒன்றாக விட்டுச்சென்றுள்ளனர்.

தற்போதுவரை, அதாவது கடந்த ஆறு மாதங்களாக இரண்டும் சேர்ந்தே வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியாக தங்களது வாழ்நாளை கழிக்கும் இரண்டு புலிகளும் தற்போது குட்டிகளை பெற்றெடுத்துள்ளன.

எத்தனையோ காதல் கதைகளை பார்த்தும் கேட்டும் இருந்த நமக்கு இந்த புலிகளின் காதல் கதை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்ல.