மனதில் துணிவு இருந்தால் மரணத்தையும் வென்றுவிடலாம்... - புலிக்கூட்டத்தில் போராடிய காட்டெருமை..!
புலிக்கூட்டத்திலிருந்து தப்பித்த காட்டெருமை
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், காட்டில் ஒரு காட்டெருமையை உணவுக்காக புலி கூட்டம் துரத்தி வருகிறது. அப்போது, அந்த புலிக்கூட்டத்திடமிருந்து அந்த காட்டெருமை அதிமின்னல் வேகத்தில் தன் உயிரை பிடித்துக் கொண்டு ஓடி வருகிறது.
ஓடி வரும்போது எதிர் நின்ற 2 புலிகளை பார்த்த காட்டெருமை மின்னல் வேகத்தில் அந்த 2 புலிகளின் தலைக்கு மேல் எகிறி குதித்து ஓடி ஆற்றில் இறங்குகிறது. காட்டெருமையை விடாமல் துரத்திய புலிக்கூட்டம் ஒரு கட்டத்தில் அந்த காட்டெருமையை விட்டுவிடுகின்றன.
தற்போது, இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் மனதில் துணி இருந்தால், மரணத்தைக்கூட வென்றுவிடலாம் என்றும், இந்த வீடியோவைப் பார்க்கும் ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் பாடத்தை கற்றுக்கொடுக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Damn since when they could move like that pic.twitter.com/J2nGyO2zXL
— Lance?? (@BornAKang) December 25, 2022