2021-ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 126 புலிகள் உயிரிழப்பு - தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அதிர்ச்சி தகவல்

shocking report in india tiger conservation tiger death rate
By Swetha Subash Dec 30, 2021 09:59 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இயற்கை
Report

2021-ம் ஆண்டு நாடு முழுவதும் 126 புலிகள் உயிரிழந்தாகவும், தமிழகத்தில் 4 புலிகள் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி நாடு முழுவதும், 126 புலிகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதில் புலிகள் காப்பகம் என வரையறுக்கப்பட்ட பகுதிக்கு வெளியே 61 புலிகளும், புலிகள் காப்பகம் என அறிவிக்கப்பட்ட இடத்திற்கு உள்ளே 65 புலிகளும் உயிரிழந்து உள்ளது.

மேலும், உயிரிழந்த மொத்த புலிகளில் 44 புலிகள் இளம் வயது புலிகள் ஆகும்.

உயிரிழந்த மொத்த புலிகளில் 35 புலிகள் இளம் வயது பெண் புலிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை மாநிலத்தில் கடந்த ஓராண்டில் (2021) 4 புலிகள் உயிரிழந்து உள்ளது.

அதில், சேதுமடை தாலுகா பகுதியில் ஒரு புலி, கோவை வனபிரிவு வரமலை சரகத்தில் 1 புலி, முதலைமடுவு ஓடை மசினகுடி வன சரகத்தில் 1 புலி மற்றும் ஜீரஹள்ளி வன சரகம் ஹசனூர் பிரிவுபல்லால ஓடை பகுதியில் 1 புலி உயிரிழந்து உள்ளது என தேசிய புலிகள் காப்பாகம் தெரிவித்துள்ளது.

பல்லுயிர் பெருக்கத்தின் சான்றாகவும், ஒரு காடு செழிப்பாக உள்ளது என வன விலங்கு கணக்கெடுப்பின்போது புலிகளை கண்டால் மட்டுமே அதிகாரிகள் உறுதி செய்வார்கள். அப்படி உள்ள சூழலில், இளம் வயது பெண் புலிகள் அதிகம் உயிரிழந்து உள்ளது, வன உயிர் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.