டிக்கெட் வாங்குனா சமந்தா பக்கத்துல உட்காரலாம்..!! ஆனா விலை எவ்ளோ'னு தெரியுமா?
குஷி பட பிரமோஷனுக்காக வரும் நடிகை சமந்தாவின் அருகில் அமர டிக்கெட் விற்பனை துவங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்துள்ளது.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி நாயகியாக இருக்கும் நடிகை சமந்தா தற்போது குஷி பட வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான சகுந்தலம் படம் மிக பெரிய அளவில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இந்த படத்தின் மீது சமந்தா மிக பெரிய நம்பிக்கையை வைத்துள்ளது கூறப்படுகிறது.

குஷி படம்
விஜய் தேவரைக்கொண்டா நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ஷிவா நிர்வாணா இயக்கியுள்ளார். இவர் முன்னதாக சமந்தா நடிப்பில் வெளியான மஜிலி படத்தை இயக்கியவர் ஷிவா நிர்வாணா. படம் வரும் 1-ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில், படத்தின் பிரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
பக்கத்துல உக்கார 2 லட்சம்
அமெரிக்காவில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் டிக்கெட் போட்டு விற்பனை செய்துள்ளனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். ரூபாய் 15 ஆயிரத்தில் இருந்து துவங்கும் இந்த டிக்கெட்டுகள் விலை 2 லட்சம் வரை நீள்கிறது.
அப்படி 2 லட்ச ரூபாய் டிக்கெட்டில் என ஸ்பெஷல் என்று கேட்டால், 2 லட்சம் கொடுத்தால் நடிகை சமந்தாவின் அருகில் அமரலாம் என்பதே ஆகும். இந்த டிக்கெட் விற்பனை துவங்கிய சில நிமிடங்களிலேயே மொத்தமாக விற்று தீர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil