இந்தியா- பாகிஸ்தான் போட்டி : வேற லெவலில் சாதனைப் படைத்த ரசிகர்கள்
2022 ஆம் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் ரசிகர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.
ஐசிசி டி20 உலககோப்பை போட்டி 2022 அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. மொத்தம் 45 போட்டிகள் கொண்ட இந்த தொடர் மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன், அடிலெய்டு, ஜிலாங், ஹோபார்ட் மற்றும் பெர்த் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
அதேசமயம் 2020 ஆம் ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட உலகக் கோப்பை போட்டிகளும் தற்போது நடைபெறவுள்ளது. இதில் அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனையை ஐசிசி நேற்று தொடங்கியது. விற்பனை தொடங்கிய 5 நிமிடத்திலேயே 90 ஆயிரம் டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டது. இதன்மூலம் குறைந்த நேரத்தில் அதிக டிக்கெட்டுகள் விற்ற போட்டி என்ற பெருமையை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பெற்றுள்ளது. இதனால் இரு அணி ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.