4 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் கட்டணம் குறைப்பு - பயணிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி!

India Indian Railways Railways
By Jiyath Feb 27, 2024 11:10 AM GMT
Report

மீண்டும் பழைய முறைக்கு ரயில் டிக்கெட் விலை குறைக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரயில் கட்டணம் 

உலகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கொரோனா முதல் அலையால் பாதிக்கப்பட்டது. அதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் ரயில் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியது.

4 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் கட்டணம் குறைப்பு - பயணிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி! | Ticket Prices For Passenger Trains Reduced

அப்போது பயணிகள் ரயில்களில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் 10 ரூபாயாக இருந்தது. பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ரயில்களிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

200 கிலோ மீட்டருக்கு குறைவான தூரம் இயக்கப்படும் ரயில்கள் விரைவு ரயில்கள் என அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் ரயில்களில் டிக்கெட் கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டு 30 ரூபாயாக அதிகரித்தது.

குறைப்பு 

இதனால் தினசரி ரயில் பயணிகளும், வர்த்தகர்களும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் பயணிகள் ரயில்களில் 20 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

4 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் கட்டணம் குறைப்பு - பயணிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி! | Ticket Prices For Passenger Trains Reduced

மேலும், கொரோனா காலத்துக்கு முன்பிருந்த கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில் "அனைத்து ரயில் நிலையங்களிலும் நிறுத்திச் செல்லக்கூடிய புறநகர் ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்களில் இனி கொரோனா காலத்துக்கு முன்பிருந்த சாதாரண கட்டணம் வசூலிக்கப்படும். இது உடனடியாக அமல்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.