வந்தே பாரத் ஸ்லீப்பர் - டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் தொடங்கி வைக்க இருப்பதாக, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
வந்தே பாரத் ஸ்லீப்பர்
அனைத்துக் கட்ட சோதனைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், கவுஹாத்தியில் இருந்து கொல்கத்தா வரை, முதல் ரயில் இயக்கப்பட உள்ளது.

உணவுடன் சேர்த்து மூன்றாம் வகுப்பு AC-க்கு 2300 ரூபாய், இரண்டாம் வகுப்பு ஏசிக்கு 3,000 ரூபாய், முதல் வகுப்பு ஏசிக்கு 3600 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் விலை
தொடர்ந்து ஆகஸ்டு 15க்குள் புல்லட் ரயில் தயாராகி விடும். முதலில் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து பிலிமோராவுக்கும், பிறகு வாபியில் இருந்து அகமதாபாத்திற்கும் இடையே இயக்கப்படும். ஜப்பான் அரசின் தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியுடன் நடைபெற்று வரும்

இந்த திட்டத்துக்கு, மத்திய அரசு 85 ஆயிரத்து 801 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. இதுவரை 412 கிலோ மீட்டர் தூரத்துக்கு அடித்தளப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், 405 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.