திபெத் எல்லையில் தமிழ்.... - நெகிழ்ச்சியோடு வீடியோ வெளியிட்ட அருணாச்சல பிரதேச முதலமைச்சர்..!

Viral Video India
By Nandhini 1 மாதம் முன்

திபெத் எல்லையில் தமிழில் பேசிய தமிழர்களின் வீடியோவை நெகிழ்ச்சியோடு அருணாச்சல பிரதேச முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

திபெத் எல்லையில் தமிழ்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அந்த வீடியோவில், தமிழ்நாட்டில் மருத்துவம் படித்த ல்ஹாம் டோர்ஜீ என்பவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரரும், தமிழில் உரையாடுகின்றனர்.

இந்த வீடியோவைப் பார்த்த, அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பீமா காண்டு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

tibet-border-tamil-viral-video

வீடியோ பகிர்ந்த முதலமைச்சர் 

இது குறித்து அருணாச்சல பிரதேச முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில், டாக்டர் லாம் டோர்ஜி தமிழ்நாட்டில் மருத்துவம் பயின்றார். மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர் ஒருவரை அவருடன் சரளமாக தமிழில் பேசி ஆச்சரியப்படுத்தினார். அவர்கள் தவாங்கில் திபெத் எல்லைக்கு அருகில் உள்ள ஓம்தாங் என்ற இடத்தில் சந்தித்தனர். உண்மையான தேசிய ஒருமைப்பாட்டுக்கு என்ன ஒரு உதாரணம்! நமது மொழியியல் பன்முகத்தன்மை குறித்து பெருமை கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.