புறப்பட தயாரக இருந்த விமானத்தில் தீ விபத்து , சிக்கிய பயணிகளின் நிலை என்ன ?

China
By Irumporai May 12, 2022 04:15 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

மேற்கு சீனாவில் நேபாளம் நோக்கி புறப்பட இருந்த விமானம் திடீரென தீ பிடித்து எரிந்த சம்பவம் அதிர்சியினை ஏற்படுத்தியுள்ளது.

திபெத் ஏர்லைன்ஸ் விமானம் சீனாவில் இருந்து திபெத்தில் உள்ள நியிஞ்சிக்கு புறப்பட இருந்த நிலையில்   ஓடுபாதையில் இருந்து இருந்து விலகிய நிலையில் விமானத்தின் இடது பக்கத்தில் திடீரென  தீ  பிடித்ததாக  கூறப்படுகிறது.இதனால்,விமானம் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது.  

இதனை தொடர்ந்து பயணிகள் விமானத்தின் பின்பக்க கதவின் மூலம் வெளியேற்றப்பட்டனர், விமானத்தில் மொத்தமாக இருந்த 113 பயணிகளும் வெளியேற்றபட்ட நிலையில் சிலர் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும்,இதனையடுத்து,தீ அணைக்கப்பட்டு ஓடுபாதை மூடப்பட்டதாகவும்,தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானம் கிளம்பும் போதே திடீரென தீ பிடித்து எரிந்த சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது , தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.