விரைவில் துப்பாக்கி இரண்டாம் பாகம்? - எப்போது தொடங்கலாம் என ஏ.ஆர்.முருகதாஸ் யோசனை! ரசிகர்கள் ஆர்வம்!
இன்னும் சில வாரங்களில் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்தப்பட ஹீரோ யார், துப்பாக்கி இரண்டாம் பாகத்தின் நிலை என்ன என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய முதல் படம், துப்பாக்கி. முருகதாஸின் திரைவாழ்க்கையில் துப்பாக்கி திரைப்படம் முக்கிய படமாக அமைந்தது. ரமணா, கஜினியைவிட கச்சிதமான கதையும், திரைக்கதையும், பாடல்களும், சண்டைக் காட்சிகளும் துப்பாக்கியில் இயல்பாக அமைந்திருந்தன.
அதனைத் தொடர்ந்து கத்தி, சர்க்கார் படங்களை முருகதாஸ் இயக்கினார். இந்த இரு படங்களும் கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கின. முருகதாஸின் கடைசிப் படமான தர்பார் திரைப்படமும் சரியாக ஓடவில்லை.

இந்த நிலையில் இவரது அடுத்த படத்துக்கு ஹீரோ கமல் அல்லது மகேஷ்பாபு என பல கருத்துகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சில வாரங்களில், இயக்குனர் முருகதாஸின் அடுத்த பட ஹீரோ யார் என்பதும், துப்பாக்கி இரண்டாம் பாகத்தின் நிலை என்ன என்பது குறித்தும் அதிகாரப்பூர்வமாக தெரியவரலாம் என கூறப்படுகிறது.
