AK-யின் 'துணிவு' படத்தின் டிரெய்லர் வெளியீடு - இது தான் கதையா?

Ajith Kumar Tamil Cinema Manju Warrier Thunivu
By Thahir Dec 31, 2022 01:44 PM GMT
Report

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு படத்தின் டிரெய்லர் வெளியானது.

Thunivu movie trailer release

துணிவு திரைப்படம் 

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 

டிரெய்லர் வெளியீடு 

Thunivu Movie Trailer

'துணிவு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா'ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் டிரெய்லர் காட்சிகள் வெளியாகியுள்ளதால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.