அடுத்த 3 மணி நேரத்தில் தமிழத்தில் இந்த 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை- வானிலை ஆராய்ச்சி மையம்
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி இருக்கிறது. இதனால், பரவலாக வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. கோடைக் காலங்களில் வழக்கமாக நிலவும் வெப்பத்தை விட இந்த ஆண்டு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கடந்த சில நாட்களாவே வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்துள்ளது.
திருச்சியை பொறுத்த வரை எப்போதுமே கோடைக்காலங்களில் வெயில் சுட்டெரிக்கும். அந்த வகையில் திருச்சி மாவட்டத்த்தில் வயலூர், சோமரசம்பேட்டை, புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்துள்ளது. இதே போல் கரூர் மாவட்டத்திலும் மழை பெய்தது. பெய்த இந்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது -
அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழத்தின் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் குமரிக்கடல் முதல் வட கேரள பகுதி வரை வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் சுழற்சியால் நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.